பெரியாரை பார்த்து பா.ஜ.கவுக்கு பயம் ஏன்? சித்தராமையா கேள்வி

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      இந்தியா
Siddaramaiah 2018 2 18

பெங்களூர் : பா.ஜ.க.வுக்கு பெரியாரை பார்த்து ஏன் பயம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை போல, தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று, பா.ஜ.கவின் எச்.ராஜா தனது முகநூலில் கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு தமிழகம் முழுக்க பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து ராஜா, தனது பேஸ்புக் அட்மின்தான், இவ்வாறு ஒரு போஸ்ட்டை வெளியிட்டதாக கூறி, அதை நீக்கியுள்ளார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா டுவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில்,

பெரியார் சிலையை பா.ஜ.கவினர் சேதப்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். புரட்சிகர சமூக சீர்திருத்தவாதியான ஈ.வே.ரா.வை (பெரியார்) பார்த்தால் ஏன் பா.ஜ.கவுக்கு பயம்? ஜாதி அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுய மரியாதை கொடுத்தவர் பெரியார். பா.ஜ.கவின் வர்க்க ஏற்றத்தாழ்வு கொள்கையை மக்கள் இதன் வழியாக பார்க்க முடியும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து