மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸை கைது செய்ய கூடாது - பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      உலகம்
Hafiz saeed(N)

லாகூர் : மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்யக்கூடாது என்று லாகூர் ஐகோர்ட்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தீவிரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. ஹபீஸ் நடத்தி வந்த மதரஸா, மருத்துவமனைகளுக்கு தடை விதித்து, அவற்றை மாகாண அரசுகளே தற்போது நிர்வகித்து வருகின்றன. இந் நிலையில் கடந்த ஜனவரியில் தன்னைக் கைது செய்யக்கூடாது என்று ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது லாகூர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஹபீஸ் சயீதை கைது செய்யக்கூடாது என்று பாகிஸ்தான் அரசுக்கும், பஞ்சாப் மாகாண அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது என்று டான் எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் தங்களது பதிலை தாக்கல் செய்யுமாறு அரசுகளுக்கு நீதிபதி அமீனுதீன் கான் உத்தரவிட்டுள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து