சர்வதேச மகளிர் தினம் : பெண் தலைவர்கள் வாழ்த்து

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      இந்தியா
womens day 2018 3 8

புது டெல்லி : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்று பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

சுஷ்மா ஸ்வராஜ்

சர்வதேச மகளிர் தினத்துக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள்.


மம்தா பானர்ஜி

பெண்களால் நாங்கள் பெருமையடைகிறோம். அவர்கள் இந்த உலகின் முதுகெலும்பு போன்றவர்கள். இந்த நாட்டில் உள்ள பெண்கள் மட்டுமல்லாமல் உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

அமைச்சர் ஸ்மிருதி இராணி

கனவுகளை நனவாக்கும் பயணங்களை நினைவுகூறும் தினம், சாதனைகளை கொண்டாடும் தினம், பாதையாக இருப்பவர்களுக்கு நன்றி கூறும் தினம். நம்பிக்கையூட்டும் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகள்.

தமிழிசை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும், இல்லங்களிலும் ஒளியேற்றிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து