இலவசப் பயணம் வழங்கிய டிராவல்ஸ்!

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      வர்த்தகம்
Parveen-Travels

‘வாழ்நாள் முழுவதும் பெண்களுக்கு மரியாதை’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை பர்வீன் டிராவல்ஸ் கம்பெனி கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளிப்பதுடன், சிறந்த எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க பெண்களை ஊக்குவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும்.

இந்த இயக்கத்தின் கீழ், தென் மாநிலங்களில் இயக்கப்படும் பர்வீன் டிராவல்ஸ் பஸ்களில் பெண்களுக்கு மார்ச் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை 5 நாட்களுக்கு இலவச பயண சலுகை வழங்கப்படுகிறது. பர்வீன் டிராவல்ஸ் பஸ்கள் செல்லும் எல்லா நகரங்களுக்கும் பெண்களுக்கு இந்த இலவச பயண சலுகை கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து