அருள் ஆனந்தர் கல்லூரியில் தாத்தா - பாட்டி மன்றம் சார்பில் மாணவ - மாணவிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      மதுரை
Arul Anandar College 8 3 18

   மதுரை -  உசிலம்பட்டி அருகில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் , தாத்தா - பாட்டி மன்றம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தாத்தா - பாட்டி மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ் .ஏ . தேவ பிரின்ஸ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் பங்கு தந்தை டாக்டர் .எஸ் .பா சில் சேவியர் முதன்மை உரையாற்றினார். தொடர்ந்து கல்லூரி  துணை முதல்வர் மைக்கேல் ஜான் பீட்டர் பேசினார். பின்னர் , மாணவ-மாணவிகள் மத்தியில் ஓய்வு பெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர் .ஆர். ஆன்டனி பால் ஞானசேகர் " ஒல்டு இஸ் கோல்டு "  என்ற தலைப்பில் தாத்தா - பாட்டிகளின் பயன்பாடுகள் பற்றியும் , அவர்களை நாம் எப்படி பாதுகாத்து , போற்றி பேணப்பட வேண்டும் என்பதைப் பற்றியும் தொடந்து சளைக்காமல் ஒரு மணி நேரம் மேல் பேசி , மாணவ-மாணவிகளிடையே பலத்த கைதட்டல் பெற்றார். மேலும், இவர் பேசுகையில் முதியவர்கள் பல நாடுகளில் வயது மூப்பு காரணமாக உறவினர்களாலேயே கொல்லப்படுவதை எடுத்து கூறினார். தற்போது உலக நாடுகளில் முதியவர்கள் பேணி, பாகாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். உலக அளவில் பல தலைவர்கள் வயது முதிர்ந்த வயதில் தான் சாதனை புரிந்துள்ளார்கள் , என்பதை எடுத்துக் கூறினார் . மேலும் இவருடைய பேச்சுக்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக இருப்பதால் அதனை தொகுத்து புத்தமாக வெளியிட்டால் அது மூத்த குடிமக்களுக்கு நாம் செய்யும் நல்ல பணியாக அமையும் என பலரும் நிகழ்ச்சியில் கூறினர். நிகழ்ச்சியில் இவரைத் தொடர்ந்து மதுரை ஐகோர்ட் வக்கீல் ராம் பிரபு மாணவ - மாணவிகளிடையே பேசினார். இவர் பேசுகையில் , முதியவர்களான தாத்தா - பாட்டி, அப்பா-அம்மா இவர்களை நாம் மிகவும் பயபக்தியுடன் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சட்டபூர்வமாக எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் பேசினார். இவர் முதியவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதியவர்களுக்கு செய்திடும் நற்பணிகளை மாணவர்களுக்கு எடுத்து கூறி அவர்களை நல்வழிப்படுத்தி உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியை கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் பொறுமையாக அமர்ந்து பேச்சாளர்கள் பேச்சுக்களை கேட்டது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து தேவ பிரின்ஸ் முதியவர்களை புரிந்து கொண்டு எப்படி அவர்களை கவனிப்பது என்பது பற்றி பேசினார். நன்றியுரை மாணவர் ஜே.ஜோசப்சேவியர் கூறினார். தேசிய கீதத்தை மாணவர் எஸ்.பிரவீண் கண்ணன் பாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து