முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், தலைமையில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      தேனி
Image Unavailable

  தேனி- தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மகளிர் திட்டம் சார்பில் உலக மகளிர் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,   தலைமையில்  கொண்டாடப்பட்டது.
    விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில்,
உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதற்கு காரணம் பெண்களின் உரிமைகள், பெண்களுக்கான சமூக பாதுகாப்பு, பெண் கல்வி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை விழிப்புணர்வு மூலம் வெளிப்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் மார்ச்-08-ஆம் நாள் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் எண்ணற்ற விழாக்கள் கொண்டாடப்படுவது போல் மகளிர்களுக்கு என தனியாக விழா கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். பெண்கள் தங்களுக்குள்ள சமூக கட்டமைப்புகளிலிருந்து தற்போது வெளியே வந்து, அனைத்துத்துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். பெண்கள் பணியாற்றாத துறைகளே இல்லை என்ற நிலை தற்பொழுது உள்ளது. தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான பெண்கள் சார்ந்த திட்டங்களை ஏற்படுத்தி சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது.
     ஒரு ஆண் கல்வி பயின்றால் அவருக்கு மட்டுமே பயன் தரும். ஆனால், ஒரு பெண் கல்வி பயின்றால் ஒரு குடும்பமே கல்வி பயின்றதற்கு சமம். பெண்கள் சிறந்த குடும்பத்தலைவியாக, பணியாளராக, வழிகாட்டிகளாக திகழ்ந்து வருகிறார்கள். எதற்கு நல்ல உதரணம் கூறினாலும், பெண்களை மட்டுமே சார்ந்து கூற முடியும். பெண்கள் குறைந்த பட்ச கல்வி கற்பதன் மூலம் ஏதேனும் தொழிற் சார்ந்த கல்வி பயின்று சுயமாக தொழில் தொடங்கி, நிலையான வருவாயை ஈட்டிட முடியும். இதன் மூலம் தன்னம்பிக்கையுடன், சுயமாக வாழ வழி ஏற்படும். பெண்கள் மற்ற பெண்களுக்கு உதவுவதன் மூலமே பெண்களின் முன்னேற்றத்திற்கு எளிதில் சாத்தியமாகும். மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிர்களுக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
     இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர்  ச.கந்தசாமி   மகளிர் திட்ட அலுவலர்  கல்யாணசுந்தரம்   மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  ஞானசேகரன்   மதுரை அகிம்சை பெண்ணியம், பெட்சி நிறுவன தலைவர் முனைவர் பா.ஆனந்தி   மாவட்ட சமூக நல அலுவலர்  தி உமையாள்   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  தி கிருஷ்ணவேனி   மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)  தி கா.ஜெயலட்சுமி   மற்றும் பெண் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு களப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து