தென்மண்டலப் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ’உருமி-2018” நாட்டுப்புறக் கலைவிழா

Urmi -2018  folk

 காரைக்குடி-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் நுண்கலைத்துறை ஆகியன இணைந்து தென்மண்டலப் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான நாட்டுப்புறக் கலைவிழாவினை 'உருமி-2018' என்ற தலைப்பில் மார்ச் 9-ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதிவரை மூன்று நாட்களுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 10-ஆம் தேதிகாலை 10.00 மணிஅளவில் நடைபெறவிருக்கும் துவக்கவிழாவினைத் தொடர்ந்து, மார்ச் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில், நாட்டுப்புற பாடல்கள் (தனிநபர் மற்றும் குழு),நாட்டுப்புற நடனம் (தனிநபர் மற்றும் குழு) மற்றும் வீதிநாடகம் ஆகியப்பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிகழ்வில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழகங்களை சார்ந்த மாணவ,மாணவிகள் பங்கேற்க உள்ளனர். மார்ச் 11-ஆம் தேதிமாலை நிறைவுவிழா நடைபெற உள்ளது. இந்த நாட்டுப்புறக் கலைவிழாவினை, அழகப்பாபல்கலைக்கழக இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுமைய ஒருங்கிணைப்பாளர் பேரா. பூ.தர்மலிங்கம் தலைமையில், நாட்டுப்புறக் கலைவிழா செயலாளர்கள் முனைவர். ஆ. ஜோதி பாசுமற்றும் முனைவர். ஆ.ளு.கனகதாரா ஆகியோர்   ஏற்பாடு செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து