ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆணையாளர் அனீஷ் சேகர், ஆய்வு

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      மதுரை
mdu corparation8 3 18

மதுரை.-மதுரை மாநகராட்சி கொடிக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,    ஆய்வு மேற்கொண்டார்.
 மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 கொடிக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வரும் நோயாளிகளின் வருகைப்பதிவேடுகள் குறித்தும், அங்கு வழங்கப் படும் மருந்து மாத்திரைகளின் பதிவேடுகள், மருந்து மாத்திரை இருப்பு பதிவேடுகள் ஆகிய பதிவேடுகளை ஆய்வு செய்தார்.  தடுப்பூசிகள் மற்றும் முக்கிய மருந்துகள் பாதுகாக்கப்படும் குளிர்சாதனப்பெட்டிகளையும், பிறப்பு சான்றிதழ்க்காக பதியப் படுவதையும் ஆய்வு செய்தார். சுகாதார நிலையத்திற்கு அதிகப்படியான நோயாளிகள் வருகை புரிவதால் காத்திருப்போர் அறையினை விரிவுப்படுத்தி கூடுதலாக கட்டுமாறும், காத்திருப்போர் அமருவதற்கு சாய்தள இருக்கைகள் அமைக்குமாறும், நோயாளிகள் மற்றும் முதியோர்கள் வருவதற்கு வசதியாக சாய்வுதளம் அமைக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். அங்கு வரும் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், வழங்கப்படும் மருந்துகள் குறித்தும், வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
 முன்னதாக அரசு இராசாசி மருத்துவமனையில் இரண்டு இடங்களில் நவீன மின்னணு கழிப்பறைகளை அரசு மருத்துவமனை முதல்வர் மரு.மருதுபாண்டி   முன்னிலையில் ஆணையாளர் திறந்து வைத்தார்.
 இந்த ஆய்வின் போது நகர்நல அலுவலர்  .சதிஷ் ராகவன், உதவி நகர்நல அலுவலர்  பார்த்திபன், செயற்பொறியாளர் திரு.ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல்  சுகாதார ஆய்வாளர்  .அலாவுதீன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து