முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை பெண்கள் முழுமையாக பெற்று பயன்படுத்தி கொள்ள முன்வரவேண்டும்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை பெண்கள் முழுமையாக பெற்று பயன்படுத்தி கொள்ள முன்வரவேண்டும் பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் - அதன்படி சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பெண்கள் முழுமையாக பயன்படுத்தி கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள முன்வரவேண்டும்- சேலம் மாவட்டத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கும் விழா சேலம் திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என் திருமண மண்டபத்தில் இன்று (08.03.2018) நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா.பாஜிபாகரே, இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முத்ரா கடன் திட்டம், ஸ்டேன்டப் இந்தியா திட்டம் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கடன், சுய தொழில் தொடங்குவதற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் 232 பயனாளிகளுக்கு ரூ.6.61 கோடி கடனுதவியை வழங்கி பேசியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கென பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை பெண்கள் முழுமையாக பெற்று பயன்படுத்தி கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள முன்வரவேண்டும். இன்றைய தின கதாநாயகிகளான அனைத்து மகளிருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். மகளிர் தினமானது இன்று ஒருநாள் மட்டும் அல்ல. அனைத்து தினங்களும் மகளிருக்கான தினங்களாகவே பெண்கள் கருதவேண்டும். சாதனை புரிந்த பெண்கள் மட்டுமே சாதனை பெண்கள் அல்ல. அனைத்து பெண்களுமே சாதனை பெண்கள் தான். ஏனென்றால் வாழ்வில் பல தடைகளை கடந்து குடும்ப சுமைகளை ஏற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். மேலும், சேலம் மாவட்டத்தில் 15,000 மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 7,500 குழுக்கள் இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 25 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கொடுக்கப்படும் கடனானது கடன் அல்ல அது ஒரு முதலீடாகும். பெண்களின் வாழ்க்கைதரம் மேம்படுவதன் மூலம் எதிர்கால இந்தியாவானது மிக சிறப்பாக அமையும். பெண்களுக்கு இயல்பாகவே நிர்வாக திறமை உள்ளது. எனவே அனைத்து வங்கிகளும் பெண்களின் மீது நம்பிக்கை வைத்து சுய தொழிலுக்காக 100 சதவீதம் கடன் கொடுக்கிறார்கள். அதேபோல் பெற்ற கடனை 100 சதவீதம் முழுமையாக திருப்பி செலுத்துவதிலும் பெண்கள் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர். பெண்களுக்கு இரும்புசத்து குறைபாடு எற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனை போக்குவதற்கு அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை பெண்கள் பெற்று மருத்துவர்களின் அறிவுரைகளின்படி எடுத்துகொள்ள வேண்டும். பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொடுக்கப்படும் ஊட்டசத்து மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனைபடி சரியான முறையில் எடுத்து கொள்ளவேண்டும். மேலும், சேலம் மாவட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 954 பெண்கள் என்ற பாலின சதவீதத்தில் தமிழகத்திலேயே பின்தங்கிய மாவட்டமாக சேலம் மாவட்டம் உள்ளது. இது முதலிடத்தில் வருவதற்கு அனைத்து பெண்கள் பெண்குழந்தைகளை பெற்றெடுக்க முன்வரவேண்டும். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை தாங்களே தீர்மானிக்கும் அளவிற்கு தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சனைகள், பெண் சிசு கொலை, வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்கமுடியும். பெண்கள் சுகாதாரம், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து அவற்றில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஆண்களும் பெண்களும் இரண்டு கண்கள் போன்றவர்கள் இரண்டு கண்களில் ஒருகண் இல்லை என்றாலும் உலகை முழுமையாக பார்க்க இயலாது. பெண்கள் ஆண்களோடு போட்டி போடுவதைவிட ஆண்களோடு இணைந்து பெண்களும் பாடுபட்டால் அக்குடும்பத்தின் வளர்ச்சியும், பொருளாதாரமும், வாழ்க்கை தரமும் தொடர்ந்து மேம்படும். ஏனவே பெண்கள் கல்விக்கும், பொருளாதாரத்திற்கும் வாழ்க்கை தரமேம்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுத்து ஆண்களோடு பெண்களும் இணைந்து சரிசமமான வாழ்க்கையை வாழ்ந்து பல சாதனைகளை படைத்திட வேண்டுமென இந்த மகளிர் தின விழாவில் வாழ்த்துகிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா.பாஜிபாகரே, இ.ஆ.ப., அவர்கள் பேசினார். இவ்விழாவில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சார்பில் பல்வேறு வங்கிகளின் மூலம் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 161 பெண்களுக்கு ரூ.2.63 கோடியும், ஸ்டேன்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 10 பெண்களுக்கு ரூ.1.18 கோடியும் மற்றும் 30 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.40 கோடியும், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் 32 குழந்தைகளுக்கு ரூ.40.26 இலட்சம் கல்வி கடனுதவியும் என மொத்தம் 232 பயனாளிகளுக்கு ரூ.6.61 கோடி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா.பாஜிபாகரே, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து