சூப்பர் பைக்குகளுக்கான விலை குறைப்பு

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      வர்த்தகம்
Harley-Davidson-Heritage-Softail-Classic 2018 03 09

அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 60 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. 800 சிசி வரை கொண்ட பைக்குகளுக்கு 60 சதவீதமும், 800 சிசிக்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு 75 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வந்தது.

இதனை வெகுவாக குறைக்க வேண்டும் என இந்தியாவிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் இதற்கான வரி 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரிகுறைப்பை அடுத்து ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது பைக்குகளின் விலையை குறைத்துள்ளது. இதுபோலவே அமெரிக்கா நிறுவனமான இந்தியன் மோட்டர் சைக்களில் நிறுவனமும் தனது தயாரிப்புகளின்  விலையை 3 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து