ரூ.2.30 லட்சம் கோடி கடன் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      வர்த்தகம்
parliament 2018 3 6

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, அரசு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும், அதை செலுத்தாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 9 ஆயிரத்து 63 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் 1.66 சதவீதம் பேர் அதிகரித்துள்ளனர்.

இவர்கள் மூலம் அரசு வங்கிகளின் வாராக்கடன் ஏறக்குறைய ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 50 கோடியாக அதிகரித்துவிட்டது. மற்றொரு கேள்வியில் கடந்த 2016-ம்ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 5 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ஏறக்குறைய ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 287 கோடியை தள்ளுபடி செய்துள்ளன என தெரிவித்தார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து