புஷான் ஸ்டீலை வாங்கும் டாடா ஸ்டீல்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      வர்த்தகம்
tata steel

புஷான் ஸ்டீல் நிறுவனத்தை டாடா ஸ்டீல் நிறுவனம் வாங்குகிறது. புஷான் ஸ்டீல் நிறுவனத்தை கையகப்படுத்த ஏலம் நடைபெற்றது. இதில் டாடா ஸ்டீல் அதிக தொகைக்கு ஏலம் கேட்டிருக்கிறது. புஷான் ஸ்டீல் நிறுவனம் வங்கிகளுக்கு ரூ.56,000 கோடி கடன் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் டாடா ஸ்டீல் வாங்குவதால், வங்கிகளுக்கு கணிசமான இழப்பு மட்டுமே ஏற்படும்.

அதே சமயத்தில் டாடா ஸ்டீல் கடன் அதிகரிக்கும். டிசம்பர் முடிவில் இந்த நிறுவனத்தின் கடன் ரூ.88,000 கோடியாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என தெரிகிறது. இந்த அறிவிப்பு காரணமாக புஷான் ஸ்டீல் பங்கு 16 சதவீதம் உயர்ந்து முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து