முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் சிங்களர் தாக்குதலுக்கு காரணமான ஆண்மை குறைவு ஏற்படுத்தும் கொத்து பரோட்டா

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்கள் மீதான சிங்களர் தாக்குதலுக்கு அடிப்படை காரணமே 'ஆண்மை குறைவு' ஏற்படுத்தும் மருந்துகள் கொத்து பரோட்டாவில் கலக்கப்படுவதாக கிளப்பிவிடப்பட்ட வதந்திதான் என கூறப்படுகிறது. தற்போது கொத்து பரோட்டாவில் அப்படியான மருந்துகள் கலக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

அம்பாறையில் முஸ்லிம் ஒருவர் நடத்தும் ஹோட்டலில் கொத்து பரோட்டாவில் சிங்களருக்கு ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இதையடுத்து பவுத்த பிட்சுகள் தலைமையில் அந்த ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டது. அம்பாறையில் தொடங்கிய இத்தாக்குதல்தான் முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு காரணமாக அமைந்தது. இதையடுத்து அந்த ஹோட்டலின் கொத்து பரோட்டா மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆனால் கொத்து பரோட்டாவில் ஆண்மை குறைவை உருவாக்கும் எந்த மருந்துகளும் கலக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு வருவதற்குள் அம்பாறை, கண்டி மாவட்டங்களில் பெருமளவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதும் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவதற்கு முஸ்லிம்கள் வழங்கிய உளவு ஒத்துழைப்பு மிகவும் உதவியாக இருந்தது என இலங்கை கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்திருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து