முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த ஆசிரியர் கைது

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      திருநெல்வேலி

நெல்லையில் வகுப்பறையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் கைது

பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.மேலும் அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தும் ஆசிரியர் வைத்துள்ளார். அத்துடன் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன் தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக பணகுடியில் உள்ள கடையில்அந்தோணிசாமி கொடுத்துள்ளார். மெமரி கார்டை ஆய்வு செய்தபோது, பள்ளி மாணவிகளை ஆசிரியர் அந்தோனிசாமி நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது.அத்துடன், அந்த காட்சிகளை அந்த கடைக்காரர் தனது நண்பர்களுக்கும் செல்போனில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சியை வைத்து ஆசிரியர் அந்தோணிசாமியை, செல்போன் கடைக்காரரின் நண்பர்கள் சிலர், மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொகை கேட்டதால், அந்தோணிசாமி பணம் தர மறுத்துள்ளார்.இதையடுத்து, ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை அவர்களில் சிலர் பணகுடி போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினரிடம் புகாரைப் பெற்ற பணகுடி போலீசார், அந்தோணிசாமியை கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து