அரியலூர் மாவட்டத்தில் மகளிர்களுக்குகெதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி : கலெக்டர் மு.விஜயலட்சுமி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      அரியலூர்
Ariyalur

 

அரியலூர் மாவட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறையின் சார்பில் மகளிர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியினை மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, நேற்று (09.03.2018) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 வாகனபேரணி

 தேசிய பெண்கள் தினமான மார்ச் 8, 2018 கொண்டுவதை முன்னிட்டு சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறையின் சார்பாக சென்னை யுவர் பி.எச்.பி. மோட்டார் கிளப் இணைந்து தமிழகத்திலுள்ள (சென்னை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, கோயம்புத்தூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம்) ஆகிய 12 மாவட்டங்களில் பெண்கள் பாதுகாப்பிற்கான இயற்றப்பட்ட சட்டங்களான குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம், வரதட்சணை தடுப்புச்சட்டம், குழந்தை திருமண தடுப்புச்சட்டம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச்சட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச்சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்து ஆண்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில், பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல்(ளுவழி ஏழைடநnஉந யபயiளெவ றுழஅநn) என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு வினாடி-வினா கருத்தரங்க விளையாட்டு மற்றும் இருசக்கர வாகன பேரணி மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ள திட்டமிட்டு, அதற்கான விழிப்புணர்வு முகாம் நேற்று (09.03.2018) அரியலூர் மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு வினாடி-வினா கருத்தரங்கில் சிறப்பாக கலந்துரையாடிய கல்லூரி மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, ஊக்கப்படுத்தப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் ப.பூங்குழலி, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.கே.லோகேஸ்வரி, சென்னை யுவர் பி.எச்.பி. மோட்டார் கிளப் நிறுவனர் கவுசிக்மூர்த்தி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொ) சிற்றரசு மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

 

 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து