ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      காஞ்சிபுரம்
kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப்பள்ளியின் ஆண்டுவிழா ஊா்கூடி குழந்தைகள் திருவிழா, பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் கு.சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.

ஆண்டறிக்கை

அறிவியல் பட்டதாரி ஆசிரியை மு.தேவிகா ஆண்டறிக்கை வாசித்தார். மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தலைவா் லட்சுமி பங்காரு அடிகளார் மாணவ மாணவியருக்கு வழங்கிய பரிசுகளையும், சான்றிதழ்களையும் வட்டார வளா்ச்சி அலுவலா் சு.பரணியும், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.) ராஜ்குமார், சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவன் ஆகியோர் வழங்கி பாராட்டி பேசினார்கள்.

ஆசிரியா் பயிற்றுனா் த.வே.அலமேலு, பள்ளி மேலாண்மை குழுத்தலைவா் ஆா்.ஜோதி மற்றும் ஆா்.பிரேமலதா, .ஷாயின்பானு, கி.திருமகள், தே.லதாபிரேமகுமாரி, முன்னாள் உடற்கல்வி ஆசிரியா் கே.தாமோதரன், செய்தி மக்கள் தொடா்பாளா் கோ.சந்தானகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திபேசினார்கள். சத்துணவு அமைப்பாளா் வி.செல்வமுத்து நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து