முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் சட்டக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      சேலம்
Image Unavailable

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 08/03/2018 வியாழக்கிழமை அன்று " சர்வதேச மகளிர் தின விழா" சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) .ஜி.சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மகளிர் தினம்

அப்போது அவர் பேசியதாவது, பெண்களின் உரிமைகளைப் பேணிக்காப்பதில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பங்கு இருக்கிறது எனவும், பெண்கள் சகிப்புத்தன்மை என்ற பெயரில் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைச் சகித்துக் கொள்வதால்தான் பெண்களின் உரிமைகள் மேலும் மேலும் பாதிக்கப்படுகிறது சட்டம் படித்த வழக்கறிஞர்களும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையினரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து பணியாற்றினால்தான் பெண்களின் உரிமைகள் உட்பட அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கமுடியும் என்றும் பேசினார். காவல்துறையும் வழக்கறிஞர்களும் ஒருவருக்கொருவர் பகையாக நினைப்பதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய துணை ஆணையர், வழக்கறிஞர்களாக எதிர்காலத்தில் மாறப்போகும் சட்டக்கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தில் இந்த ஒற்றுமையுணர்வை நோக்கி நகரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

விளக்கம்

 

முன்னதாக பெண்ணுரிமையை நிலைநாட்டுவதில் காவல்துறைக்கு இருக்கும் பங்கு பற்றியும், பெண்ணுரிமைக்கு தற்போதுள்ள பிரச்சனைகள் பற்றியும் மாணவ மாணவியர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு காவல்துறை துணை ஆணையர் . ஜி.சுப்புலட்சுமி விளக்கமளித்தார்.

விழாவின் தலைமையுரை ஆற்றிய சார்பு நீதிபதி.ரவிச்சந்திரன் பண்டைய காலத்திலிருந்தே பெண்களை மதித்துப் போற்றிய சமுகம் தான் நமது இந்தியச் சமூகம் பெண்ணுரிமையை நிலைநாட்டுவதில் ஆண்களுக்கு உள்ள மிகப்பெரிய பொறுப்பினை வலியுறுத்தினார். பின்னர் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் மாணவியர்கள் பலர் மாவட்ட சார்பு நீதிபதியின் முன்பு பெண்ணுரிமையைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் பேசினர். முன்னதாக உதவிப் பேராசிரியை சாந்தகுமாரி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் பேகம் பாத்திமா துவக்கவுரையாற்றினார். . கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் .மாணிக்கம் விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசினை வழங்கினார். உதவிப்பேராசிரியை. டானியா சி பால்சன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து