இ-வே பில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயம்

சனிக்கிழமை, 10 மார்ச் 2018      வர்த்தகம்
GST Council meeting Arun Jaitley 2018 03 10

சரக்கு வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ பொருட்களை எடுத்துச் செல்லும் போது சரக்கு வாகன ஓட்டிகள் இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகும். கடந்த 15 நாட்களாக சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இ-வே பில் முறை நேற்றுடன் முடிந்துவிட்டது. நேற்று முதல் முறைப்படி இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

இ-வே பில் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இந்த நடைமுறை தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் ஏற்கெனவே அமலில் உள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது, நாடுமுழுவதும் கட்டாயமாக்கப்படுகிறது. டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து