பாக்.கின் மற்றொரு அப்ரிடி: 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய வேகபந்து வீச்சாளர் !

சனிக்கிழமை, 10 மார்ச் 2018      விளையாட்டு
one more afridi 2 2018 3 10

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதே ஆன ஷஹீன் ஷா அப்ரிடி டி20 லீக்கில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

சுல்தான்ன்ஸ் பேட்டிங்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் குவாண்டர்ஸ் அணிகள் மோதின. முதலில் முல்தான் சுல்தான்ன்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. 14-வது ஓவரை ஷஹீன் ஷா அப்ரிடி வீசினார். 6 அடி, 6 இன்ச் உயரம் கொண்ட இடது கை வேகப்பந்து வீச்சாளரான அப்ரிடி முதல் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

3 விக்கெட்டுக்கள்...

16-வது ஓவரை ஷஹீன் ஷா அப்ரிடி வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இந்த ஓவரில் விட்டுக்கொடுத்த இரண்டு ரன்களும் லெக்பைஸ் என்பதால் அவரது கணக்கில் சேரவில்லை. 18-வது ஒவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி 1 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3 ஓவரில் 1 மெய்டன் உடன் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்த 2 விக்கெட்...

20-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த அப்ரிடி, 3-வது மற்றும் 4-வது பந்தில் விக்கெட் வீழ்த்தினார். இதனால் 3.4 ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். 92 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த சுல்தான் முல்தான்ஸ் அணி 114 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆனது.

4-வது வீரராக ....

இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் இலங்கை வீரர் ஹெராத், ரஷித் கான், சொஹைல் தன்வீர் ஆகியோர் 3 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தனர். அவர்களுக்கு அடுத்த இடத்தை அப்ரிடி பிடித்துள்ளார். ஷஹீன் அப்ரிடி 4 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி குறைவான ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அனில் கும்ப்ளே 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து