லாகூரில் நவாஸ் ஷெரீப் மீது ஷூ வீச்சு!

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018      உலகம்
shoe thrown nawaz sharif 2018 3 11

லாகூர் :  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மர்ம நபர் ஒருவர் ஷூவை எறிந்து முழக்கங்கள் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது.

லாகூரில் நேற்று கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த நவஸ் ஷெரீப் மேடையில் இருந்த தலைவர்களுடன் கை குலுக்கிக் கொண்டு வந்தார். பின்னர் மைக்கை பிடித்த போது சட்டென பார்வையாளர் பகுதியில் இருந்து ஷெரீப் மீது ஷு வீசப்பட்டது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தார் நவாஸ் ஷெரீப். இதையடுத்து ஷுவை வீசிய நபர்களை சுற்றி வளைத்த நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் அவரை கடுமையாகத் தாக்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து