அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      உலகம்
russia missile test 2018 3 12

மாஸ்கோ : அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்ததாக ரஷ்யா நேற்று தெரிவித்தது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

 “நாட்டின் தென்மேற்கு பகுதியில் சவுத் மிலிட்டரி மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து கின்ஜால் ஏவுகணை ஏவப்பட்டது. எம்ஐஜி 31 சூப்பர்சானிக் இடைமறிப்பு விமானத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, திட்டமிட்டபடி வெற்றிகரமாக இலக்கை தாக்கியது” என கூறப்பட்டுள்ளது.


இதுதொடர்பான வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எம்ஐஜி விமானம் சீறிப் பாய்கிறது. சிறிது நேரத்தில் அதன் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏவுகணை தனியாக பிரிந்து இலக்கை நோக்கி விரைகிறது. ரஷ்யாவில் வரும் 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அடுத்த தலைமுறை புதிய அணு ஆயுதங்களை அதிபர் விளாடிமிர் புடின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தார். இதில் ஒன்றுதான் கின்ஜால் ஏவுகணை. இது அணு ஆயுதங்களை சுமந்தபடி ஒலியைப்போல 10 மடங்கு வேகத்தில் 2 ஆயிரம் கி.மீ.தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் வாய்ந்தது. இதுகுறித்து விளாடிமிர் புடின் கூறியபோது, “கின்ஜால் ஏவுகணை சிறந்த ஆயுதம். இது கடந்த டிசம்பர் 1-ம் தேதி ராணுவத்தில் சேர்க்கப்பட்டது” என்றார்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து