முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த கும்பகோணம் அகிலாவின் உடல் ஒப்படைப்பு

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

தேனி :  குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த கும்கோணத்தை சேர்ந்த அகிலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு இரு குழுக்களாக 36 பேர் சென்றனர். ஒரு குழுவில் 24 பேரும் மற்றொரு குழுவில் 12 பேரும் சென்றிருந்தனர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 9 பேரில் 5 பேர் பெண்கள் ஆவார். உயிரிழந்த 9 பேரும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைப்பக்கப்பட்டது. காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த அகிலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த அகிலா சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் குரங்கணி மலைக்கு ட்ரெக்கிங் சென்ற அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து