முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேசான் நிறுவனத்தில் 5 மாதத்தில் ரூ.1.3 கோடி மோசடி செய்த இளைஞர்கள் 4 பேர் கைது

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகாவில் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 10-ம் வகுப்பைக் கூட முடிக்காத ஒரு ஊழியர் வேலைக்குச் சேர்ந்த 5 மாதத்தில் 1.3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்ய அளித்த டேப் கணினி மூலமாக இந்த மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
துருவா என்று அழைக்கப்படும் தர்ஷனுக்கு 25, இவரும் அவரது நண்பர்களும் சேர்ந்துகொண்டு விலை உயர்ந்த பொருட்களை டெலிவரி செய்வது பின்னர்ப் பணம் ஏதும் பெறாமல் பொருட்களை டெலிவரி செய்வது என 1.3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து அமேசான் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 24 லட்சம் மதிப்பிலான பணம், 21 ஸ்மார்ட்போன், ஒரு லேப்டாப், ஐபாடு மற்றும் ஆப்பிள் வாட் உள்ளிட்ட பொருட்களுடன் அவர்கள் பயன்படுத்தி வந்த 4 வாகனங்களும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மொசடியானது 2017 செப்டம்பர் முதல் 2018 பிப்ரவரி மாதம் வரை நடைபெற்று இருந்ததாகவும் சிக்கமங்குளூரில் இருந்து 4,604 ஆர்டர்கள் மேசான் தளத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், அவை அணைத்தும் தர்ஷானால் டெலிவரி செய்யப்பட்டதும் ஏக்தந்தா கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், அமேசான் நிறுவனம் அவர்களுடன் பொருட்களை டெலிவரி செய்யவும் பணத்தினைப் பெற்று தரவும் ஒப்பந்தம் போட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

எப்படி மோசடி நடைபெற்றது என்ற விவரங்கள் தெரியவில்லை என்றாலும் தர்ஷன் பன பரிவர்த்தனை அமைப்பில் உள்ள ஒரு ஓட்டையினைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர் என்று மட்டும் காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்திற்கு இந்த மோசடியானது காலாண்டு அறிக்கையினை ஆடிட் செய்யும் போது தான் பிப்ரவரி மாதம் தான் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் தர்ஷன் உட்பட 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமேசான் நிறுவனத்தில் 1.3 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக மார்ச் 8-ம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தர்ஷன் தான் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிட்டுள்ளனர். பிஓஎஸ் இயந்திரமும் காவால் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் கார்டு பேமெண்ட் மூலமாகப் பணம் பெறுவது ஆனால் பணத்தினை அமேசான் நிறுவனத்திற்குச் செல்லாமல் தடுத்து தங்களது வங்கி கணக்குகளுக்குத் திருப்புவது என்று மோசடி செய்துள்ளனர்.

தர்ஷன் தான் டேப் கணினியை பயன்படுத்தி இந்த முறைகேட்டினை செய்துள்ளார் என்றும் எனவே அதனைத் தடயவியல் ஆய்வு செய்ய அனுப்பியுள்ளதாகவும் சில வாடிக்கையாளர்கள் போலியான முகவரிகளில் ஆர்டர்களை அளித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் காவல் துறையினைக் கூறியுள்ளனர்.

தர்ஷனுடன் சேர்த்து புனித் 19, சச்சின் ஷெட்டி 18, அனில் ஷெட்டி 24 என அனைவரும் சிக்கமங்களூருவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து