முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையை நள்ளிரவிலும் உலுக்கிய விவசாயிகள் பேரணி

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை, மார்ச், மகராஷ்டிராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய பேரணி நள்ளிரவிலும் நீடித்தது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து நாசிக்கில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பிரம்மாண்ட பேரணியை தொடங்கினர். இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணமாக மும்பையை நோக்கி புறப்பட்டனர்.  இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் இந்த பிரம்மாண்ட விவசாய பேரணி நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்தது. நள்ளிரவிலும் மக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாத வண்ணம் விவசாயிகள் பேரணி நடத்தினர். இந்த நிலையில் நேற்று 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். 

சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்ரே இந்தப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். சிவசேனாவால் இந்ததருணத்தில் என்ன செய்ய முடியுமோ அதனை நாங்கள் செய்வோம். நம்முடைய நிறம் என்ன என்பது முக்கியம் அல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள். நமது கோரிக்கைகள் ஒன்றுதான். சிவசேனா பிற கட்சிகளை போல் கிடையாது. சிவசேனா மக்களின் பிரச்சினையை கவனிக்கும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து