சைதாப்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் தையல் மிஷின், புடவை, பாத்திரங்கள், நலத்திட்ட உதவிகள்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      சென்னை
chennai

ஜெயலலிதாவின் 70–வது பிறந்த நாளையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பெண்களுக்காக கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு போட்டி

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் இதுபோன்று போட்டிகள் நடத்தி ஏழை எளிய மக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் ஆ.பழனி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதேபோன்று இந்த ஆண்டும் இதற்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தார்.ஜெயலலிதாவின் 70–வது பிறந்த நாளை முன்னிட்டு தென்சென்னை தெற்கு மாவட்டம் சைதை பகுதி 171வது வார்டில் மாநகராட்சி முன்னாள் சுகாதார நிலைக்குழுத் தலைவரும், முன்னாள் 171வது மாமன்ற உறுப்பினருமான ஏ.பழனி ஏற்பாட்டில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தையல் எந்திரங்கள், காபி, டீ வியாபாரம் செய்ய எவர்சில்வர் டீகேன், எவர்சில்வர் டிபன்பாக்ஸ், எவர்சில்வர் டப்பா, ஹாட் பாக்ஸ், கொத்தனாருக்கு தொழில் செய்ய தேவையான உபகரணங்கள், மழலையர் பள்ளிக்கு டிரங்க் பெட்டிகள், பெண்களுக்கு புடவைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.., டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி. ஆகியோர் வழங்கினார்கள்.

உடன் சைதை பகுதி செயலாளர் என்.எஸ். மோகன், எம்.எம்.பாபு, தி.நகர் சோ.சாமிநாதன், சொ.கடும்பாடி, சைதை ஏ.சந்தோஷ், ஜெ.ஞானமுத்து, கு.செல்வநாயகம், அரிஜெயபால், வட்ட செயலாளர்கள் போர் ரவி, . பாஸ்கர், சோட்டுர் சீத்தாராமன், நா.பாஸ்கர், எம்.சுகுமார் மற்றும் கடையாபட்டி கிருஷ்ணன், எம்.வசந்தகுமார், பரமசிவம், சாலை எஸ். அருள்பிரகலாஷ், விஜி, ரமேஷ், துரை, பிரகாஷ், சரவணன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து