மாதவரத்தில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கலெக்டர்களுக்கு கோரிக்கை

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      சென்னை

சென்னை அடுத்த மாதவரம், மஞ்சம்பாக்கம், மாதவரம்பால்பண்ணை, அசிசிநகர், உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் 500அடிக்கு கீழ் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை திருடி தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் சென்னையில் உள்ள ஓட்டல்கள் தனியார் நிறுவனங்கள் திருமண மண்டபங்கள் ஆகியவற்றிக்கு விற்பனை செய்து வருகின்றனர்

பறிமுதல்

மேலும் 100க்கும் மேற்பட்ட அனுமதி இல்லாமல் இயங்கும் வாட்டர் கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இந்த கம்பெனிகளில் நாளென்றுக்கு பல லட்சம் வாட்டர் கேன்கள் மூலம் மினிலாரிகளில் சென்னையில் உள்ள அலுவலங்கள் மற்றும் வங்கிகள் வணிகநிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட வருகிறது. இந்த பகுதிகளில் நடக்கும் நிலத்தடி நீர் திருட்டை தடுக்க வேண்டும் என பொது நல சங்ககளும் குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்த கடந்த வருடம் திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி அம்பத்தூர் உதவி கலெக்டராக இருந்த அரவிந்தன் மாதவரம் தாசில்தாராக இருந்த முருகநந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீர் திருட பயன்படுத்தப்படும் ராட்சத மோட்டார்களையும் நிலத்தடி நீர் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர். ஆனால் தற்போது அதே நிலையில் நிலத்தடி நீர் திருடுவது தற்போது நடைபெற்று வருகிறது. 500அடிக்கு மேல் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர்; எடுப்பதால் மாதவரம் பகுதி சுமார் 700க்கும் மேற்பட்ட மீட்டர் அளவில் கடல்நீர் நிலத்தடியில் புகுந்ததாக கூறப்படுகிறது.

மாதவரம் மாரியம்மன் கோயில் பாரதியார் தெரு அருள்நகர் மூலச்சத்திரம் ஆகிய பகுதிகளில் தற்போது வீட்டு உபயோக ஆழ்துளைகிணறுகளில் உப்பு கலந்த குடிநீர் வருவதாக கூறப்படுகிறது இந்த நிலத்தடி நீர் திருட்டுக்கு மாதவரம் வருவாய்துறையினரும் மாதவரம் பாலபண்ணை போலிசாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையன பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் திருட கூடாது என சென்னை உயர்நிதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

உயர்நிதிமன்ற நீலத்தடி நீர் திருட கூடாது என தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலத்தடி நீர் குறித்து பொதுநல சங்க நிர்வாகி மா.போ.பழனி கூறும் போது மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் சில தனிநபர்கள் நிலத்தடி நீர் திருடுவதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நிலத்தடி நீர் திருடுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முடியவில்லை நிலத்தடி நீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கும் படி 5000ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றாக திரண்டு திருவள்ளுர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து