கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் , பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் : கலெக்டர் த.அன்பழகன் வழங்கினார்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      கரூர்
karur

 

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.அன்பழகன், தலைமையில் நேற்று (12.03.2018) நடைபெற்றது.

 விதவை உதவித்தொகை

  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 584 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

 மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.6940 மதிப்பில் 3 பயனாளிகளுக்கு 3 சக்கர வண்டியும், 1 பயனாளிக்கு ரூ.5,400 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலியும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத்திட்ட நல அலுவலர் பாலசுப்பிரமணியன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து