திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூபாய் 22 லட்சத்து 52 ஆயிரத்து 750 மதிப்பில் பல்வேறு உதவித்தொகைகள் : கலெக்டர் கு.ராசாமணி வழங்கினார்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      திருச்சி
Trichy

 

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(12.03.2018) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுநீதி நாளில் காது கேட்கும் கருவி கேட்டு விண்ணப்பித்த 2 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் மற்றும் 197 நபர்களுக்கு ரூபாய் 22 லட்சத்து 52 ஆயிரத்து 750 மதிப்பில் பல்வேறு உதவித்தொகைகளை கலெக்டர் கு.ராசாமணி. வழங்கினார்.

 மருத்துவ காப்பீடு

மனுநீதி நாளில் காது கேட்கும் கருவி கேட்டு விண்ணப்பித்த 2 பயனாளிகளுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் காது கேட்கும் கருவியினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த சொக்கநாதபுரம், கொல்லப்பட்டி மற்றும் நடுவளுர் ஆகிய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த அனைத்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் இல்லங்களில் 100 விழுக்காடு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டி பயன்படுத்தி வருகின்றனர். இதனை பாராட்டி மாவட்ட கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியரின் தன் விருப்பநிதியிலிருந்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 நபர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தாட்கோ மூலம் 9 நபர்களுக்கு சுயதொழில் புரிவதற்காக ரூபாய் 8 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கல்வி உதவி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 7 நரிகுறவர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூபாய் 1000த்திற்கான ஆணையினையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 62 நபர்களுக்கு தலா ரூபாய் 20,000 வீதம் நலிந்தோர் நலத்திட்ட உதவிகள், 29 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, 68 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, 5 நபர்களுக்கு ஆதரவற்ற விதவை உதவிதொகைக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட நலப்பணிகள் நிதிக்குழுவின் மூலம் இலால்குடி வட்டம், சிறுமயங்குடி கிராமத்தை சேர்ந்த ஜோ.ஆரோக்கியம்மாள் கணவரை இழந்து வறுமையில் வாடும் அவருக்கு ரூபாய் 5 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரமும், திருச்சிராப்பள்ளி புத்தூரைச் சேர்ந்த ஆதரவற்ற சாய் லட்சுமி சரஸ்வதிக்கு உதவித்தொகையாக ரூபாய் 5 ஆயிரத்திற்கான ஆணையினையும், திருச்சி, மன்னார்புரம் செங்குளம் காலனியைச் சேர்ந்த மாணவி.வைஷ்ணவி மாநகர கல்லூரியில் பி.சி.. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். வறுமையில் வாடும் அவருக்கு கல்வி நிதியுதவியாக ரூபாய் 5 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.~Pர், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் பாலாஜி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் க.பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து