முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      நீலகிரி
Image Unavailable

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக்கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 244 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. பொதுமக்கள் அளித்த இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள  மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

                                    பட்டுப்புழு வளர்ப்பு         

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டுவளர்ச்சித்துறை சார்பில் மாநில திட்டத்தின் கீழ் 7 விவசாயிகளுக்கு புழு வளர்ப்பு மனை கட்டப்பட்டதற்கு மானியமாக ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 875 மதிப்பிலான காசோலையையும், ஒரு விவசாயிக்கு ரூ.52,500 மதிப்பிலான விவசாய உபகரணத்தினையும், அதனைத்தொடர்ந்து கல்லட்டி பகுதியைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பவருக்கு மாதம் ரூ.1000 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதிக்கு குட்செப்பர்டு சர்வதேச பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதன் துணை முதல்வர் பிரிகேடியர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் தனஞ்செயன் ஆகியோர் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பாஸ்கரன், உதவி ஆணையர்(கலால்) முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் தனலிங்கம், பட்டுவளர்ச்சி துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து