முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு - சுற்றுலா வழிகாட்டி கைது

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

தேனி : தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுலா வழிகாட்டி ராஜேஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

10 பேர் பலி...

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது.  குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது.  சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று முன்தினம் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர்.  வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்தன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காட்டு தீ விபத்தில் பலியான 9 பேரின் சடலங்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் 6 பேர் பெண்கள். காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் மற்றும் 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த மலையேற்ற பயிற்சி நிறுவனம் இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி பெறாமல் காட்டுக்குள் அவர்கள் சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வழிகாட்டி கைது...

இந்நிலையில், மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஸ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இதற்கிடையே, காட்டுத்தீ குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  இதற்கிடையே சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உரிய அனுமதி இல்லாமல் மாணவர்கள் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார். முறையான அனுமதி பெற்றிருந்தால், பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து