முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 6-வது நாளாக பார்லி. முடங்கியது

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நேற்று பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கியது. இதனால் நேற்று 6-வது நாளாக பாராளுமன்ற அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் 5-ம் தேதி தொடங்கியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம் என பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் பெரும்பாலான நேரங்களில் முடங்கியே இருந்தது.

மீண்டும் அமளி...

மேற்கண்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் அவையை நடத்த ஒத்துழைக்க மறுத்தன. இந்நிலையில், விடுமுறைக்கு பின்னர் நேற்று மீண்டும் பாராளுமன்றம் கூடியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியதும், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

6-வது நாளாக....

இதனால், மக்களவையை நேற்று மதியம் 12 மணி வரையும் மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்தி வைத்து சபாநாயகர்கள் உத்தரவிட்டனர். பின்னர் மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி நீடித்ததால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  இதனால், தொடர்ந்து 6-வது நாளாக மக்களவை நடவடிக்கை முடங்கியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பிறகு கூடிய மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்ததால் இன்றுவரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து