முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை காரணமாக இந்தியா - இலங்கை இடையேயான போட்டி 19 ஓவர்களாக குறைப்பு

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது ஆட்டம் கொழும்பிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

லேசான மழை

இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி கண்டது இந்தியா. எனவே, இந்த ஆட்டத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும் விதத்தில் நேற்று களமிறங்கியது. போட்டி நடைபெறும் இடத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை வெளியான நிலையில், போட்டி தொடங்கும் சில மணித்துளிகளுக்கு முன்னதாக சிறிது நேரம் லேசான மழை பெய்தது. இதனால் இப்போட்டி 19 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. இதில் 4 பந்துவீச்சாளர்கள் வரை 4 ஓவர்களும், 3 பந்துவீச்சாளர்களுக்கு 3 ஓவர்களும் பந்துவீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். 2 போட்டிகளில் விளையாட தினேஷ் சண்டிமலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அணி கேப்டனாக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அணிகள் விவரம்:

இந்தியா

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட்.

இலங்கை

தனுஷ்கா குணதிலகா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), உபுல் தரங்கா, டாசன் ஷனகா, திசர பெரேரா (கேப்டன்), ஜீவன் மென்டிஸ், அகிலா தனஞ்ஜெயா, நுவான் பிரதீப், சுரங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து