முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளின் வாக்குறுதியை நிறைவேற்ற பா.ஜ.க.வுக்கு கடைசி வாய்ப்பு இதுதான்: சிவசேனா

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை, மகராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க அரசு, விவசாயிகளிடம் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுக்க இதுதான் கடைசி வாய்ப்பாகும் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.

வேளாண் கடன் தள்ளுபடி என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புனே நகரில் இருந்து மும்பை நோக்கி 50 ஆயிரம் விவசாயிகள் பேரணி நடத்தினர். இவர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட திட்டமிட்டிருந்த நிலையில், அவர்களுடன் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பேச்சு நடத்தினார். அதில் விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளித்ததையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்தும், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது,

கோரிக்கைகளை வலியுறுத்திய 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். விவசாயிகளிடம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாளுபவர்களின் முகத்தில் விவசாயிகள் கொடுக்கும் அறை, எப்போதும் நினைவில் இருக்கும். எதிர்காலத்தில் விவசாயிகளின் வாழ்க்கையில் யாரும் விளையாடுவதற்கு முயற்சிக்க மாட்டார்கள். முதல்வர் பட்நாவிஸ் தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு விவசாயிகள் கொடுத்திருக்கும் கடைசி வாய்ப்பாகும். அவர்களிடம் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் பட்நாவிஸ் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து