முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி, பிரதமருக்கு தனித்தனியாக விமானம் வாங்க மத்திய அரசு முடிவு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தனித்தனியாக விமானங்கள் வரும் 2020ம் ஆண்டுக்குள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வெளிநாடு, உள்நாட்டு பயணத்துக்காக இரு போயிங் 77-300 இ.ஆர் விமானங்களை சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியது. இந்த விமானத்தில் வி.ஐ.பி.க்கள் ஓய்வு அறை, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அறை, மருத்துவ சிகிச்சை அளிக்கும் அறை போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும், விமானத்தில் வைபை வசதி, எந்தவிதமான ஆயுதங்களாலும் தாக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்று உள்ளன.

பிரதமர், ஜனாதிபதி இதற்கு முன் பயன்படுத்திய போயிங் 747 விமானம் போல் இல்லாமல், 777 போயிங் விமானம் மிகவும் நவீனமானது. இந்த விமானம் எந்தவிதமான இடையூறுமின்றி டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு இடைநிற்காமல் பறக்க முடியும். அதற்கேற்றார்போல் எரிபொருள் நிரப்பும் வசதி இதில் உண்டு.

இந்த வகையான விமானங்கள் விரைவில் மத்திய அரசு சொந்தமாக வாங்கி, வி.வி.ஐ.பிக்களின் பயன்பாட்டுக்காக மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வகையான விமானங்களை ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு வாங்க உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வகையான விமானத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மட்டுமே பயணிக்க முடியும். இந்த விமானங்களை வாங்குவதற்காக அடுத்த நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ. 4 ஆயிரத்து 469 கோடி ஒதுக்கி உள்ளது.

இந்த விமானங்கள் குறித்த அறிந்த அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், போயிங் விமானம் மிகவும் விலைமதிப்பானது. அந்த விமானத்தை வாங்கியபின், தனித்தனி சிறப்பு வசதிகளை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விமானங்களை இயக்குவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற 44 பைலட்கள் தயார் செய்யப்படுகிறார்கள். அதில் 4 பேர் எப்போதுமே மாற்று பைலட்களாக செயல்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து