நடிகையும், சமாஜ்வாடி எம்.பி.யுமான ஜெயாபச்சனுக்கு ரூ. ஆயிரம் கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      இந்தியா
Jaya Bachchan 2018 03 09

புது டெல்லி, நடிகையும், சமாஜ்வாடி கட்சியின் எம்.பி.யுமான ஜெயாபச்சன் தனக்கு ரூ. ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக மாநிலங்களவை வேட்புனுத் தாக்கலில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அமிதாபச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் சமாஜ்வாடி கட்சியில் நீண்ட காலமாக இருந்து வருகிறார். தற்போது எம்.பி.யாக இருக்கும் ஜெயாபச்சன் மீண்டும், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ. ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு மாநிலங்கள் அவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் போட்டியிடும் போது தனக்கு ரூ.412 கோடி சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்த ஜெயாபச்சன் சொத்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 550 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஜெயாபச்சன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனக்கும், தன்னுடைய கணவர் அமிதாப்பச்சனுக்கும் ஏறக்குறைய ரூ. 463 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், நகை, பணம், கார் உள்ளிட்டவை ரூ. 540 கோடிக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதில் ஜெயாபச்சனிடம் இருக்கும் தங்க நகைகள் மதிப்பு மட்டும் ரூ. 62 கோடியாகும், அமிதாப்பின் நகைகள் மதிப்பு ரூ.36 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப், ஜெயாபச்சனிடம் மொத்தம் 12 விலை உயர்ந்த கார்கள் உள்ளன. சொந்தமாக ரூ. 3.4 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களும் உள்ளன. ஜெயாபச்சனிடம் இருக்கும் பேனா மதிப்பு ரூ.9 லட்சமாகும்.

மேலும், பிரான்ஸ் நாட்டில் பிரிங்நோகன் பிளேஜ் பகுதியில் 3,175 சதுரமீட்டர் பரப்பில் ஒரு பங்களாவும், டெல்லிநொய்டா, போபால், புனே, அகமதாபாத், குஜராத் காந்திநகர்ஆகிய இடங்களில் சொகுசுவீடுகளும், சொத்துக்களும் உள்ளன. ஜெயாபச்சனிடம் லக்னோ அருகே கக்கோரி பகுதியில் ரூ.2.2 கோடி மதிப்பில் 1.22 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. பாரபங்கி மாவட்டம், தவுலத்பூர் பகுதியில் அமிதாப்புக்கு ரூ.5.7 கோடி மதிப்பில் நிலம் இருக்கிறது. இவ்வாறு அந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து