பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      ஆன்மிகம்
Sabarimala ayyappan 2016 12 04

பம்பை : சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி மாத பூஜைக்காக 14-ம் தேதி (இன்று) நடை திறக்கப்படுகிறது.

பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தினமும் அதிகாலை 3.30 மணி முதல் 11 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும்.

19-ம் தேதி இரவு பங்குனி மாத பூஜைகள் நிறைவடைந்து அன்றிரவு 10 மணிக்குக் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் பங்குனி உத்திர விழாவுக்காக 20-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். 21-ம் தேதி காலை 10 மணியளவில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் தலைமையில் கொடியேற்றம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து