முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத அபராத தொகையை குறைத்தது ஸ்டேட் வங்கி

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை 75 சதவீதம் அளவுக்குக் குறைத்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.

குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களிடம் இருந்து பெற்ற பரிந்துரைகளை ஏற்று, அபராதத்தைக் குறைக்க எஸ்.பி.ஐ வங்கி முன்வந்துள்ளது. புதிய அபராதக் கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 25 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்.

அதாவது, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவில்லை என்றால் மாதந்தோறும் அபராதமாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இது ரூ.15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜி.எஸ்.டி.யும் வசூலிக்கப்படும்.

இதே போல, நகர எல்லை மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் இருக்கும் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காவிட்டால், மாதந்தோறும் ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.12 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 ஜி.எஸ்.டி வரியாக வசூலிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து