தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      தமிழகம்
TN assembly 2017 07 01

சென்னை : தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

6 நாட்கள்...

தமிழக சட்டசபை நாளை காலை 10.30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் முதல் நாளான நாளை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதைத்தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்று முடிவெடுக்கப்படும். பட்ஜெட் மீதான விவாதம் அனேகமாக 6 நாட்கள் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அனைத்துக்கட்சிகள் கூட்டம் கடந்த 22ம் தேதி நடைபெற்றது.

சிறப்பு கூட்டம்...

இந்த கூட்டத்தில் பிரதமரை அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமர் தலைமையில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நான்கு மாநிலங்களின் உயர் அதிகாரிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவுகள் குறித்து அதில் பங்கேற்ற தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முதல்வரை சந்தித்து விளக்கம் அளித்தனர். இதையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து வலியுறுத்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான கூட்டம் வரும் 16ம் தேதி நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து