தெற்கில் கிடைக்கும் வருமானத்தை வடக்கில் செலவு செய்யும் மத்திய அரசு - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      இந்தியா
chandrababu naidu 2017 5 28

ஐதராபாத் : மத்திய அரசு தெற்கில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வடக்கில் செலவு செய்து வருகிறது என்று ஆந்திர  முதலவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றவில்லை

ஆந்திர மாநில சட்டசபையில் அவர் பேசியதாவது, ஆந்திர மாநிலப் பிரிவின் போது மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து ஆந்திர பிரதேசம் புறக்கணிக்கப்படுகிறது. பொதுவாகவே மத்திய அரசுக்கு அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக தென் இந்திய மாநிலங்கள் உள்ளது, ஆனால் அவ்வாறு கிடைக்கும் வருவாயானது வடமாநிலங்களின் வளர்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மக்களுடையது

ஆந்திர பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி கிடையாதா? ஏன் இந்த பாகுபாடு காட்டப்படுகிறது? வருவாயில் மத்திய அரசின் பணம் மற்றும் மாநில அரசின் பணம் என்றெல்லாம் கிடையாது. வருமானம் அனைத்தும் இந்திய மக்களுடையது. மக்களின் உணர்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். உணர்ச்சியின் அடிப்படையில் மாநிலத்தை பிரிக்க முடியும் போது, அதே உணர்ச்சியின் அடிப்படையில் ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து