முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழா திரளாக பக்தர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 14 மார்ச் 2018      கன்னியாகுமரி
Image Unavailable

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் நள்ளிரவஒடுக்கு பூஜையானது சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாசிக் கொடை விழா

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழாவானது சிறப்பாக நடந்தது. கடந்த 4ம் தேதி  திருவிழாவானது கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை கணபதி ஹோமம், பஞ்சாபிஷேகம், தீபாராதனை, மதியம் உச்சிகால பூஜை, மாலை சாயரட்சை தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது. 3ம் நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியும், 9ம் தேதி நள்ளிரவு வலியப்படுக்கை பூஜையும், 12ம் தேதி பெரிய சக்கர தீவெட்டி அலங்கார பவனியுடன் அம்மன் வெள்ளிப்பல்லக் கில் பவனியும் சிறப்பாக நடந்தது. 10ம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை மண்டைக்காடு சாஸ்தான் கோயிலிலிருந்து யானை மீது களபம் பவனி, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, அடியந்திர பூஜை, குத்தியோட்டம் ஆகியவை நடந்தது. இதனால் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் கோயிலுக்கு அருகிலுள்ள தோப்புகளில் கூட்டம் கூட்டமாக பொங்கலிட்டு வழிபட்டனர்.மதியம் 1 மணி முதல் சமய மாநாடு, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல், சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடந்தது. ஒடுக்கு பவனியின் போது சாஸ்தான் கோயில் வளாகத்தில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகளை கோயில் பூசாரிகள் வாயில் துணியை கட்டி 13 பானைகளில் தலையில் சுமந்து அம்மன் சன்னதிக்கு எடுத்து வந்தனர். இதை காண்பதற்கு திரளான பக்தர்கள் கோயிலை சுற்றி அமர்ந்து இருந்தனர். 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையானது தீபாராதனையுடன் நிறைவடைந்தது. வரும் 20ம் தேதி எட்டாம் கொடையும், 21ம் தேதி மீன பரணிக் கொடையும் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து