முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 நாட்கள் பயணமாக மடஸ்கர் சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு வரவேற்பு

புதன்கிழமை, 14 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

மொரிசியஸ் பயணத்தை முடித்துக்கொண்டு மடஸ்கர் வந்தடைந்த ராம்நாத் கோவிந்த்திற்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பளம் அளித்து வரவேற்றது.

6 நாட்கள்...

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6  நாட்கள் பயணமாக  மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக கடந்த 11-ம் தேதி மொரிசியஸ் புறப்பட்டு சென்ற ராம்நாத் கோவிந்த்,  அங்கு நான்கு நாட்கள் தங்கி இருந்தார்.  பின்னர் மொரிசியஸ் நாட்டில் நடைபெற்ற 50-வது சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பின் அந்நாட்டின் ஜனாதிபதி அமீனா குர்ஜிப்பையும், பிரதமர் பிரவிண்ட் குக்நாத்தையும் சந்தித்து பேசினார்.

மொரிசியஸ் பயணம்

அதன் பின்னர் மொரிசியஸ் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட ராம் நாத் கோவிந்த் 2 நாட்கள் பயணமாக  மடகஸ்கர் நாட்டிற்கு வந்தார். அவருக்கு  அந்நாட்டு அரசு சிவப்பு கம்பளம் அளித்து  கவுரவித்தது.  நேற்று மாலை அந்நாட்டின் ஜனாதிபதி ஹெரி ராஜோனரிமாம்பியானினாவை சந்தித்து பேசுகிறார். பின்னர் 15-ம் தேதி மடகஸ்கரில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார். மடகஸ்கர் நாட்டுக்கு ஒரு முக்கிய இந்திய தலைவரின் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து