கடன் விவகாரம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதன்கிழமை, 14 மார்ச் 2018      வர்த்தகம்
central gcenovernment(N)

வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களின் பெயரையும், புகைப்படத்தையும் நாளேடுகளில் வெளியிட்டு, அவமானப்படுத்துங்கள் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளிக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், வங்கிகள் தங்களின் வாரியக்குழு உறுப்பினர்களின் அனுமதி பெற்று கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் நபர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் வெளியிடுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து