டி.சி.எஸ் பங்குகளை விற்றது டாடா சன்ஸ்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      வர்த்தகம்
tcs

டாடா சன்ஸ் நிறுவனம் ரூ.8,200 கோடி மதிப்புள்ள டிசிஎஸ் பங்குகளை விற்றிருக்கிறது. இந்த தொகை மூலம் கடனை அடைப்பது மற்றும் குழும நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு டாடா சன்ஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கள் கிழமை இந்த பங்குகள் விற்கப்பட்டிருக்கின்றன.

திங்கள் கிழமை வர்த்தகத்தின் முடிவில் ஒரு டிசிஎஸ் பங்கு 3,052 ரூபாயில் முடிவடைந்தது. இதில் இருந்து 4.17 சதவீதம் முதல் 5.9 சதவீத தள்ளுபடியில் இந்த பங்குகள் விற்கப்பட்டிருக்கின்றன. ஒரு பங்கு 2,872 ரூபாய் முதல் 2,925 ரூபாய் வரை மொத்தமாக விற்கப்பட்டிருக்கிறது. சுமார் 2.83 கோடி பங்குகள் (1.48%) விற்கப்பட்டிருக்கின்றன. இந்த பங்கு விற்பனைக்கு பிறகு டிசிஎஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸ் பங்கு 73.52 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக குறையும். இந்த பங்கு விற்பனை குறித்து டாடா சன்ஸ் கருத்து ஏதும் கூறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து