முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவிக நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      சென்னை
Image Unavailable

பெரம்பூரை அடுத்த திரு.வி.க நகர் எஸ்.ஆர்.பி கோயில் வடக்கு தெருவில் உள்ள நடைபாதை மற்றம் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் அங்கு 5 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றுவதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை ஒத்துழைப்புடன் அகற்றி வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

 அதன் ஒரு பகுதியாக இன்று காலை திரு.வி.க நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சியின் 6-வது மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறபடுத்தி வந்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எதிர்ப்புகளை மீறி மதியம் வரை அகற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

அவருடன் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இணைந்து கொண்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகளை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீசார் விலக்கிவிட்டனர். மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன் மற்றம் உதவி செயற்பொறியாளர் உட்பட மாநகராட்சி ஊழியர்களை வியாபாரிகள் தாக்க முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து அதிகாரிகள் தப்பித்து போலீஸ் உதவியுடன் காரில் ஏறி தப்பி சென்றனர். அதை தொடர்ந்து வியாபாரிகள் கேட்டு கொண்டதன்பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு கைது செயயபட்டவர்கள் விடுவிக்கபட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து