ஓட்டேரி பகுதியில் வீட்டு வாடகை பிரச்சனையில் உரிமையாளரை தாக்கிய நபர் கைது

புதன்கிழமை, 14 மார்ச் 2018      சென்னை

சென்னை, ஓட்டேரி, வள்ளுவன் தெரு, எண்.45 என்ற முகவரியில் பாலமுருகன், /48, /பெ.கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சாமுவேல் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சாமுவேல் கடந்த சில நாட்களாக சரிவர வாடகை கொடுக்காமல் உரிமையாளர் பாலமுருகனை ஏமாற்றி வந்துள்ளார்.

சிறையில் அடைப்பு

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் பாலமுருகன், சாமுவேலிடம் சென்று வீட்டை காலி செய்யும் படி கூறியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் சாமுவேல், வீட்டின் உரிமையாளர் பாலமுருகனை கத்தியால் தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த பாலமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இது தொடர்பாக பாலமுருகன், ஓட்டேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சாமுவேல், என்பவரை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட சாமுவேல் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகள் உள்ளது தெரியவருகிறது.கைது செய்யப்பட்ட சாமுவேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து