முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ எல்லை தடுப்பு சுவர் மாதிரி வடிவமைப்பு: டிரம்ப் பார்வையிட்டார்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

சான் டியாகோ: அமெரிக்கா மெக்சிகோ இடையிலான எல்லையில் அமைக்கப்பட உள்ள பிரம்மாண்டமான தடுப்பு சுவருக்கான மாதிரி வடிவமைப்புகளை அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.

மெக்சிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க சுமார் 650 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்ற டிரம்ப், இரு நாட்டு எல்லையில் மிக உயரமான கான்கிரீட்டாலான எல்லைத் தடுப்புச் சுவர் எழுப்பப்படும் என்று அறிவித்தார். இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ நகரில் எல்லை சுவருக்கான மாதிரி வடிவமைப்பு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, டிரம்ப் அதிபரான பிறகு முதன்முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை கலிபோர்னியா மாகாணத்துக்கு சென்றார். பின்னர் சான் டியாகோ நகரில், எல்லை சுவருக்காக தயாரிக்கப்பட்டிருந்த 8 மாதிரி வடிவமைப்புகளை பார்வையிட்டார். இதிலிருந்து ஒன்றை அவர் தேர்வு செய்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மெக்சிகோ எல்லையில் மிக உயரமான அளவில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படும். இதன் மீது யாராலும் ஏற முடியாது. திட்டமிட்டபடி சுவர் அமைக்கப்பட்டால் சட்டவிரோத குடியேற்றம் 99 சதவீதம் தடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து