முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் ஆலோசனைக்;கூட்டம்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2018      தேனி
Image Unavailable

 தேனி -தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா கொண்டாடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,  தலைமையில் நடைபெற்றது.
  கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
 மங்கலதேவி (கண்ணகி) கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முழு நிலவு அன்று தமிழக-கேரள மக்களால் சித்திரை மாதம் முழு நிலவு விழா கொண்டாடப்பட்டு வருவதனையொட்டி, இவ்வாண்டு முழு நிலவு நாளான 29.04.2018 அன்று திருவிழா கொண்டாடப்படவுள்ளது.
  எனவே, திருவிழா நடைபெறும் அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால், தமிழக மற்றும் கேரள பகுதி பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி,  6 சோதனைச் சாவடி மையங்கள் அமைத்து எளிதில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கிடவும், 4 வாகன சோதனை மையங்கள் அமைத்து வாகனத்தின் உறுதிதன்மைச் சான்று வழங்கிடவும், வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்திடவும், அடிப்படை வசதிகளான சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி, தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி, பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் வனத்துறையின் மூலம் மேற்கொள்ளவும், கோவிலில் உள்ள கிணற்றை சுத்தம் செய்து குடிநீர் வசதி செய்து தரவும், நடமாடும் பாதுகாப்பு வாகனத்தை கொண்டு தமிழக-கேரள காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், இருதய நோய் நிபுணர்களுடன் கூடிய மருத்துவக் குழுவினரை விழா இடத்தில் பணியமர்த்திடவும், தேவையான ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ கருவிகளைக் கொண்டு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் மூலம் போதுமான மீட்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திடவும், வருகை தருகின்ற பக்தர்களுக்கு ஏதுவாக தரிசனம் குறித்து தகவல் பலகையினை அமைத்திடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலேசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.
   வனப்பகுதிக்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவினை சிறப்பான முறையில் கொண்டாடிட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,  தெரிவித்தார்.
 இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.கந்தசாமி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஞானசேகரன் அவர்கள், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.சென்னியப்பன் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி ஜெயலட்சுமி அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து