முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் புதிய நடை மேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

புளோரிடா: அமெரிக்காவின்  புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் அருகே புதிதாக கட்டப்பட்ட நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

புளோரிடா மாகாணத்தின் மியாமி பகுதியில் அமைந்துள்ளது புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம். இங்கு, பாதசாரிகள் எளிமையாக சாலையைக் கடக்க கடந்த வாரம் புதிதாக சிறிய நடை மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த மேம்பாலம் வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மேலும் பலர் உயிரிழக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.இதுதவிர, பல கார்களும் மேம்பால இடிபாடுகளில் சிக்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து