முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் உளவு அதிகாரி மீது தாக்குதல்: 23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றியது பிரிட்டன்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி மீதான ரசாயன தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றி உள்ளது.

ரஷ்ய முன்னாள் உளவு அதிகாரியான செர்ஜி ஸ்கிரிபால் (66) பிரிட்டனிடம் ரகசிய தகவலை பகிர்ந்து கொண்டார். இதனால், அவருக்கு சிறை தண்டனை வழங்கிய ரஷ்யா, பின்னர் மன்னிப்பு வழங்கியது. இதையடுத்து, பிரிட்டனில் குடியுரிமை பெற்று தங்கியுள்ளார்.

இந்நிலையில் ஸ்கிரிபால், அவரது மகள் யுலியா (33) ஆகிய இருவரையும் ரசாயன விஷம் கொடுத்து கொல்ல முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செர்ஜி ஸ்கிரிபால், அவரது மகளைக் கொல்ல ரஷ்யா முயற்சி செய்துள்ளதாக பிரிட்டன் குற்றம் சாட்டி உள்ளது. இந்நிலையில், தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை உடனடியாக வெளியேற்றுமாறு பிரிட்டன் பிரதமர் தெரசா மே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அதிகப்படியானவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டிருப்பது இதுவே முதல் முறை. மேலும் ரஷ்யாவுடனான உயர்மட்ட அளவிலான இரு தரப்பு தகவல் தொடர்பையும் பிரிட்டன் ரத்து செய்துள்ளது.

இதற்கு பதிலடியாக தங்கள் நாட்டில் பணிபுரியும் பிரிட்டன் தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றுவோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து