முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்போது வோடோஃபோனும் சிக்கலில்...!

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

கடந்த சில மாதங்களாகவே ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வந்தனர். பல இடங்களில் ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியதால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து ஏர்செல் நிறுவனமே வாடிக்கையாளர்களை வேறு நெட்வொர்கிற்கு மாறி கொள்ளும்படி அறிவுரை வழங்கியது.அவ்வாறு மாறியவர்களில் அதிகப்படியோனோர் தேர்வு செய்தது ஏர்டெல் மற்றும் வோடோபோனைத் தான்.

இதனிடையே  நாட்டின் பல்வேறு இடங்களில் ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் சேவையும் நேற்று முன்தினம் சரிவர கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர். ஏர்செல், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் வோடோஃபோன் வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் வரை நிம்மதியில் இருந்தனர். ஏர்செல்லில் இருந்து சரியான நெட்வொர்க்கான வோடோஃபோனுக்கு மாறியுள்ளதாகவும் சிலர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வோடோஃபோனிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று பல இடங்களில் வோடோஃபோன் சிம்மிலிருந்து மற்றவர்களுக்கு தொடர்புகொள்ள முடியவில்லை. நெட்வொர்க் சரியாமல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து